திங்கள், 8 டிசம்பர், 2008

பச்சை வயற்கடலில்

பச்சை வயற்கடலில்
வண்ணவண்ணமாய்
கப்பற் பெண்கள்
நாற்று நங்கூரம்
இடுகின்றனர்
அக்கடல் நடுவில்
தொடர்வண்டி நிரோட்டம்
அதில் அழகு மீன்களாய்
சின்ன பெண்கள்
கருப்பு பெண்களின்
கடுத்த வண்ண
புடவைகளின்
வண்ண தெரிவை
கிண்டல் செய்யும்
சின்ன மீன்கள்
உடுத்த ஒரு புடவை
உடுமாற்ற ஒரு புடவை
வெளிறிய வண்ணமாயின்
உடன் வெளுத்து விடும்
கடுத்த வண்ணமாயின்
அடுத்த ஆடிவரை தாங்கும்
வண்ணம நாலும்
அறிவார்கள் அத்தைமார்கள்
வான வில்லின்
நிறமானைத்திலும்
என் தங்கை
ஆடை உடுத்தும்
நாள் தூரமில்லை

ve.pitchumani

கருத்துகள் இல்லை: